Make Karanthan.com my Home Page Bookmark Karanthan.com
 நுழைவாசல்
 கரந்தன் பற்றி
 பாடல்கள்
 வாழ்த்துகள்
 தொடர்புகட்கு
 உரும்பிராய் பற்றி
 ஆக்கங்கள்
 நிகழ்வுகள்
 துயர்பகிர்வோம்
 நினைவஞ்சலி
 உதவி
 
கோவில் தளங்கள்
உரும்பிராய் கற்பக விநாயகர் ஆலயம்
நல்லூர்
கிராமத்து தளங்கள்
உரும்பிராய்
நீர்வேலி
குரும்பசிட்டி
குப்பிளான்
ஊரெழு
மன்னார்
சிறுப்பிட்டி
நாகர்மணல்
Bookmark and Share
Bookmark and Share
Bookmark and Share
நீர்வேலி, கோப்பாய், கரந்தன், உரும்பிராய் கிழக்கு அருள்மிகு மனோன்மணி அம்பிகா சமேத சிவபூதநாதேஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் தீர்த்தத்விழா 09.05.2013 அதாவது இன்று பக்தி பூர்வமாக மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. சரியாக காலை 06.30 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகி அதனை தொடர்ந்து சரியாக காலை 09.00 மணிக்கு வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்றது. பின்னர் சிவபெருமான்-உமாதேவி, பிள்ளையார், முருகன்-வள்ளி-தெய்வானை ஆகிய மூன்று தெய்வங்களும் தவில் நாதஸ்வரக் கலைஞர்களின் மங்கள இசையுடன் உள் வீதி வலம் வந்து கோவிலின் வடக்கு திசையில் அமர்ந்து கொண்டனர். பின்னர் தீர்த்தத் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் தெய்வங்கள் தீர்த்தம் ஆடிய பின்பு வெளி வீதி நோக்கி சென்றது. பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் அரோகரா.... அரோகரா.... என்று இடை சொல்லிய வண்ணம் இருந்தனர். பின்னர் வெளி வீதி உலா வந்தனர். தீர்த்தத்விழாவில் பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் பங்குபற்றினர். நீர்வேலி, கோப்பாய், கரந்தன், உரும்பிராய் கிழக்கு அருள்மிகு மனோன்மணி அம்பிகா சமேத சிவபூதநாதேஸ்வர சுவாமி ஆலய தீர்த்தத்விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

சிறப்பாக நடைபெற்ற தீர்த்தத்விழாக் காட்சிகளை இங்கு காணலாம்....



படங்கள்
தர்சனா சிவாகரன்.
நீர்வேலி, கோப்பாய், கரந்தன், உரும்பிராய் கிழக்கு அருள்மிகு மனோன்மணி அம்பிகா சமேத சிவபூதநாதேஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் தேர்த்திருவிழா 08.05.2013 அதாவது இன்று மிகவும் பக்தி பூர்வமாக மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. சரியாக காலை 7 மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி அதனை தொடர்ந்து சரியாக காலை 8 மணிக்கு வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்றது. பின்னர் சிவபெருமான்-உமாதேவி, பிள்ளையார், முருகன்-வள்ளி-தெய்வானை ஆகிய மூன்று தெய்வங்களும் விசேட தவில் நாதஸ்வரக் கலைஞர்களின் மங்கள இசையுடன் உள் வீதி வலம் வந்து பின்னர் தேர் இருப்பிடம் நோக்கி சென்றது. பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் அரோகரா.... அரோகரா.... என்று இடை விடாது சொல்லிய வண்ணம் இருந்தனர். பின்னர் மூன்று தெய்வங்களும் மூன்று தேர்களில் அமர்ந்து வீதி உலா வந்தனர். விசேட தவில் நாதஸ்வரக் கலைஞர்களின் மங்கள இசை பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. தேர்கள் வீதி உலா கொண்டு வரும் அடியவர்களுக்கு நமது உரும்பிராய் இளைஞர்களினாலும், கரந்தன் இளைஞர்களினாலும் போடப்பட்ட தண்ணீர் பந்தல் பெரிதும் உதவியது. ஏன் என்றால் அடியவர்கள் தேரை வீதி உலா கொண்டு வரும் போது நமது இளைஞர்களினால் தேர்கள் இருக்கும் இடங்களுக்கு சென்று அடியவர்களுக்கு சக்கரை தண்ணீர் வழங்கி சிறப்பித்தனர். பின்னர் தேர்கள் இருப்பிடத்தை வந்து சேர்ந்தது. அதனை தொடர்ந்து அடியவர்கள் அர்ச்சனை செய்தார்கள். பின்னர் மூன்று தெய்வங்களும் பச்சை சார்த்தப்பட்டு உள்ளே கொண்டு செல்லப்பட்டது. தேர்த்திருவிழாவில் பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் பங்குபற்றினர். குறிப்பாக தூர இடங்களில் இருந்தும் பல பக்த அடியார்கள் வந்து இருந்தார்கள். இந்த நீர்வேலி, கோப்பாய், கரந்தன், உரும்பிராய் கிழக்கு அருள்மிகு மனோன்மணி அம்பிகா சமேத சிவபூதநாதேஸ்வர சுவாமி ஆலய தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழாக் காட்சிகளை இங்கு காணலாம்....



படங்கள்
டர்சிகா சச்சிதானந்தம்.
நீர்வேலி, கோப்பாய், கரந்தன், உரும்பிராய் கிழக்கு அருள்மிகு மனோன்மணி அம்பிகா சமேத சிவபூதநாதேஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத் திருவிழாவின் 8ஆம் திருவிழாவான கற்பூரத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பெரும் எண்ணிக்கையான பெண்மணிகள் கற்பூரசட்டி எடுத்து தத்தமது வேண்டுதல்களை நிறைவு செய்தனர். அதன் காட்சிகளை இங்கு காணலாம்.



படங்கள்
பொ.ரமணன்.
அன்பார்ந்த கரந்தன் இணைய உறவுகளுக்கு ஒரு தகவல் நீர்வேலி, கோப்பாய், கரந்தன், உரும்பிராய் கிழக்கு அருள்மிகு மனோன்மணி அம்பிகா சமேத சிவபூதநாதேஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத் திருவிழாவின் தொகுப்புகள் மற்றும் படங்களை உடனுக்குடன் தர முடியாது உள்ளது. நடந்து முடிந்த 6 நாள் திருவிழாக்கும் நாங்கள் உடனுக்குடன் படங்கள் மற்றும் தொகுப்புகளை தந்தோம். அந்த நேரத்தில் கரந்தன் இணைய அங்கத்தவர் ஒருவர் உடனுக்குடன் இணையதளத்தில் வழங்கிக்கொண்டு இருந்தார். தற்போது அவர் அங்கு இல்லை. மிண்டும் வேறு ஒரு அங்கத்தவர் சென்றுள்ளார். கோவில் திருவிழாக்காக எனவே மிண்டும் நாளை தொடக்கம் உங்களுக்கு தொகுப்புகள் மற்றும் படங்களை உடனுக்குடன் தந்து உதவுவோம்.

தகவல்
கரந்தன் இணையம்.

<< Previous 1 2 3 4 Next >>

Copyright © 2006-2008, Karanthan.com All rights reserved.   Design & Solution By:- e Tec Designs