|
|
|
|
|
|
|
|
|
|
|
|
 |
|
|
|
 |
|
|
|
கனடா வாழ் உரும்பிராய் மக்களுக்கு:
உரும்பிராய் பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கம் நடாத்தும் வருடாந்த ஒன்றுகூடல் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெற இருக்கின்றது.... பல் வகை விளையாட்டு நிகழ்வுகள் பல தர வயத்தினாருக்குமாக நடைபெற இருக்கின்றது. நிகழ்வுகள் 8:30 ஆரம்பமாக இருக்கின்றது...@ Milliken park (Middlefield & Steels)July 11, 2010... அனைவரும் கலந்து உங்கள் உறவுகளை கண்டு கழியுங்கள்.... மேலதிக விபரங்களுக்கு jsenthuran@gmail.com தொடர்பு கொள்ளுங்கள்.
மாபொரும் உதைபந்தாட்டம்

உரும்பிராய் கற்பக பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் தேர்த்திருவிழா பக்தி பூர்வமாக மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. தேர்த்திருவிழா சம்மந்தமான புகைப்படங்களை இங்கு பார்க்கலாம்.

நீர்வேலி, கோப்பாய், கரந்தன், உரும்பிராய் கிழக்கு அருள்மிகு மனோன்மணி அம்பிகா சமேத சிவபூதநாதேஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் தீர்த்தத்விழா இன்று பக்தி பூர்வமாக மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. சரியாக காலை 7மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகி அதனை தொடர்ந்து சரியாக காலை 9மணிக்கு வசந்த மண்டப பூசை இடம்பெற்றது. பின்னர் சிவபெருமான் உமாதேவி, பிள்ளையார், முருகன் வள்ளி தெய்வானை ஆகிய மூன்று தெய்வங்களும் விசேட தவில் நாதஸ்வரக் கலைஞர்களின் மங்கள இசையுடன் உள் வீதி வலம் வந்து கோவிலின் வடக்கு திசையில் தீர்த்தத் பூஜை நடந்தது. பின்னர் தெய்வங்கள் தீர்த்தம் ஆடிய பின்பு வெளி வீதி நோக்கி சென்றது. பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் அரோகரா.... அரோகரா.... என்று இடை சொல்லிய வண்ணம் இருந்தனர். பின்னர் வெளி வீதி உலா வந்தனர். விசேட தவில் நாதஸ்வரக் கலைஞர்களின் மங்கள இசை பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. தீர்த்தத்விழாவில் பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் பங்குபற்றினர். குறிப்பாக வெளிநாடுகளிலும், கொழும்பில் இருந்தும் பல பக்த அடியார்கள் வந்து இருந்தார்கள். இந்த நீர்வேலி, கோப்பாய், கரந்தன், உரும்பிராய் கிழக்கு அருள்மிகு மனோன்மணி அம்பிகா சமேத சிவபூதநாதேஸ்வர சுவாமி ஆலய தீர்த்தத்விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

தகவல்- செந்தூரன் 13-05-2010
நீர்வேலி, கோப்பாய், கரந்தன், உரும்பிராய் கிழக்கு அருள்மிகு மனோன்மணி அம்பிகா சமேத சிவபூதநாதேஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் தேர்த்திருவிழா இன்று பக்தி பூர்வமாக மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. சரியாக காலை 7 மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி அதனை தொடர்ந்து சரியாக காலை 8 மணிக்கு வசந்த மண்டப பூசை இடம்பெற்றது. பின்னர் சிவபெருமான் உமாதேவி, பிள்ளையார், முருகன் வள்ளி தெய்வானை ஆகிய மூன்று தெய்வங்களும் விசேட தவில் நாதஸ்வரக் கலைஞர்களின் மங்கள இசையுடன் உள் வீதி வலம் வந்து பின்னர் தேர் இருப்பிடம் நோக்கி சென்றது. பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் அரோகரா.... அரோகரா.... என்று இடை விடாது சொல்லிய வண்ணம் இருந்தனர். பின்னர் மூன்று தெய்வங்களும் மூன்று தேர்களில் அமர்ந்து வீதி உலா வந்தனர். விசேட தவில் நாதஸ்வரக் கலைஞர்களின் மங்கள இசை பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. தேர்கள் வீதி உலா கொண்டு வரும் அடியவர்களுக்கு நமது உரும்பிராய், கரந்தன் இளைஞர்களினால் போடப்பட்ட தண்ணீர் பந்தல் பெரிதும் உதவியது. ஏன் என்றால் அடியவர்கள் தேரை வீதி உலா கொண்டு வரும் போது நமது இளைஞர்களினால் தேர்கள் இருக்கும் இடங்களுக்கு சென்று அடியவர்களுக்கு சக்கரை தண்ணீர் வழங்கி சிறப்பித்தனர். பின்னர் தேர்கள் இருப்பிடத்தை வந்து சேர்ந்தது. அதனை தொடர்ந்து அடியவர்கள் அர்ச்சனை செய்தார்கள். பின்னர் மூன்று தெய்வங்களும் பச்சை சார்த்தப்பட்டு உள்ளே கொண்டு செல்லப்பட்டது. தேர்த்திருவிழாவில் பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் பங்குபற்றினர். குறிப்பாக வெளிநாடுகளிலும், கொழும்பில் இருந்தும் பல பக்த அடியார்கள் வந்து இருந்தார்கள். இந்த நீர்வேலி, கோப்பாய், கரந்தன், உரும்பிராய் கிழக்கு அருள்மிகு மனோன்மணி அம்பிகா சமேத சிவபூதநாதேஸ்வர சுவாமி ஆலய தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
 தகவல்- செந்தூரன் 12-05-2010
நீர்வேலி, கோப்பாய், கரந்தன், உரும்பிராய் கிழக்கு அருள்மிகு மனோன்மணி அம்பிகா சமேத சிவபூதநாதேஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் கொடியேற்ற திருவிழா இன்று பக்தி பூர்வமாக மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. கொடியேற்ற திருவிழா நிறைவு பெறும்போது பெருமழை பொழிந்தமை சிவபூதநாதேஸ்வரரின் திருவருளே என அடியவர்கள் மெய்சிலிர்த்துக் கொண்டனர்.
நீர்வேலி, கோப்பாய், கரந்தன், உரும்பிராய் கிழக்கு அருள்மிகு மனோன்மணி அம்பிகா சமேத சிவபூதநாதேஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் கொடியேற்ற திருவிழா இன்று பக்தி பூர்வமாக மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. சரியாக காலை 6:00 மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி அதனை தொடர்ந்து சரியாக காலை 9:30 மணிக்கு வசந்த மண்டப பூசை இடம்பெற்றது. பின்னர் 10:30 மணிக்கு கொடியேற்றம் இடம்பெற்றது. அதனை தொடர்து சிவபெருமான் உமாதேவி, பிள்ளையார், முருகன் வள்ளி தெய்வானை ஆகிய மூன்று தெய்வங்களும் விசேட தவில் நாதஸ்வரக் கலைஞர்களின் மங்கள இசையுடன் வெளி வீதி உலா வந்து பின்னர் உள்ளே உலா வந்து முன்று தெய்வங்களும் தங்களது இருப்பிடத்துக்கு சென்றது. அத்துடன் கொடியேற்ற திருவிழா நிறைவு பெற்றது. இந்த கொடியேற்ற திருவிழாக்கு பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் பங்குபற்றினர்.
கொடியேற்ற திருவிழா தொடர்பான படங்கள் விரைவில் இணைக்கப்படும்
தகவல் கரந்தன் இணையம்
அருள்மிகு மனோன்மணி அம்பிகா சமேத சிவபூதநாதேஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா இம் மாதம் 29 திகதி அதாவது வரும் வியாழகிழமை ஆரம்பமாக உள்ளது.வருட அருள்மிகு மனோன்மணி அம்பிகா சமேத சிவபூதநாதேஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா படங்களை எமது இணையத்துக்கு தந்து உதவிய கரந்தன், உரும்பிராய் இளைஞர்களுக்கு மிக்க நன்றியை தெருவிக்கின்றோம். குறிப்பாக ஐங்கரன் தொலைதொடர்பு நிலையம்( உரிமையாளர் பகீரதன்) மற்றும் கரந்தன் இளைஞர்களுக்கு ( கிரிதரன், பிரசன்னா மற்றும் சக நண்பர்கள் ) உரும்பிராய் இளைஞர்களுக்கு ( வினோ அண்ணா, ஐங்கரன், ஜனகரூபன், கங்காசுதன், கருணாகரன், சரண்யன் மற்றும் சக நண்பர்கள் ) மற்றும் ஆலய நிர்வாகசபைக்கும், தொண்டர்சபைக்கும் நன்றியை தெருவிக்கின்றோம். நாங்கள் யாருக்காவது நன்றி சொல்ல மறந்து இருந்தால் அவர்களுக்கும் எமது நன்றியை தெருவிக்கின்றோம். அதே போன்று இந்த வருடமும் நீங்கள் எமக்கு மகோற்சவ திருவிழா படங்களை தந்து உதவுமாறு கேட்டு கொள்கின்றோம். நாங்கள் இந்தமுறை மகோற்சவ திருவிழா படங்களை உடனுக்கு உடன் இணையதில் போடுவதுக்கு தீர்மானித்து உள்ளோம். அதற்கு நீங்கள் எமக்கு படங்களை அனுப்புமாறு கேட்டுகொள்கிறோம்.
நீங்கள் படங்களை அனுப்ப வேண்டிய முகவரி
Senthuran Email:- jsenthuran@gmail.com Mobile:- 0773320130 Thinesh :- j.thinesh26@gmail.com
அருள்மிகு மனோன்மணி அம்பிகா சமேத சிவபூதநாதேஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ நிகழ்ச்சி நிரல்

உரும்பிராய் பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கம் - (கனடா) நடாத்து பொங்கல் விழா 16/01/2010 அன்று கொண்டாடப்பட இருக்கின்றது. பல கலைநிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றது. அனைத்து கலைநிகழ்வுகளும் உரும்பிராய் மக்கள் - அவர் தம் பிள்ளைகள் மட்டும் கலந்து கொள்ளும் நிகழ்வு ஆகும்.. பிரவேசம் - இலவசம்...

வரலாற்றுச் சிறப்பு மிக்க நீர்வேலி ஸ்ரீ அரசகேசரிப் பிள்ளையார் கோவிலின் வருடாந்தப் பெருந்திருவிழாவில் தேர்த்திருவிழா கடந்த 03.09.2009 வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. வசந்த மண்டபப் ப10சையைத் தொடர்ந்து பஞ்சமுக விநாயகரும் வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமானும் தேரில் ஆரோகணித்து அடியவர்களுக்கு அருள்பாலித்தனர். விநாயகருக்குரிய சித்திரத் தேரும்ää முருகப் பெருமானுக்குரிய சித்திரத் தேரும் காலை 8.45 மணிக்குத் தமது திருவுலாவை ஆரம்பித்துக் காலை 9.45 மணிக்கு இருப்பிடத்தை வந்தடைந்தன.
தேர்த்திருவிழாவை முன்னிட்டு உதயன் பத்திரிகையில் இரண்டு பக்கச் சிறப்பு மலர் வெளிவந்தது. ஆலயக் குருக்கள் தேவர் ஐயாää நீர்வை மணி ஐயா, வலி.கிழக்குப் பிரதேச சபைச் செயலாளர் ச.நடராசா, சிவத்தமிழ்ச் சொல்லழகர் ச.லலீசன், ஆலயப் பரிபாலன சபையினர் அகியோரின் செய்திகளும் ஆலய வரலாறு தொடர்பான குறிப்புரையும் நீர்வை முருகதாசனின் கவிதையும் மலரை அலங்கரித்தன. நீர்வேலியின் பிரபல வர்த்தகர்கள் மலர் வெளியீட்டுக்கு அனுசரணை வழங்கியிருந்தனர்.
மறுநாள் வெள்ளிக்கிழமை தீர்த்தத் திருவிழா இடம்பெற்றது. தீர்த்தத் திருவிழாவில் இம்முறை புதிய சாத்துப்படி மேற்கொள்ளப்பட்டது. பிள்ளையார்ää முருகன் ஆகியோர் புதிதாக நாகசடப் பின்னணியில் அமைந்த ஆசனத்தில் அமர்ந்து வீதியுலா வந்தனர். இரவு கொடியிறக்கம் இடம்பெற்றது. இத்திருவிழாக்கள் யாவற்றிலும் பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் பங்குபற்றினர்.
சனிக்கிழமை (05.09.2009) ப10ங்காவனத் திருவிழா இடம்பெற்றது. எளிமையாகவும் பக்தி ப10ர்வமாகவும் சுவாமிக்கான பூசை வழிபாடுகள் இடம்பெற்றன. அதனை அடுத்து தனிப்பட்ட உபய நிகழ்வாக (திரு. செல்வம்) அமுதசுரபிக் கலாமன்றத்தின் பட்டிமண்டப நிகழ்வும், நல்லூர் ராகம்ஸ் இசைக்குழுவின் ராஜராகங்கள் இசை நிகழ்ச்சியும் அதிகாலை வரை இடம்பெற்றன.
தகவல்: நீர்வைக் கிழார் (சப்பரம், தேர், தீர்த்தம் தொடர்பான முக்கிய படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)
முதலியார் அத்தியார் அருணாசலத்தின் நினைவு நாளை நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி தனது பரிசுத் தினமாகக் கொண்டாடி வருகின்றது. எதிர்வரும் 22.09.2009 அன்று பாடசாலையின் பரிசளிப்பு விழா இடம்பெறவுள்ளது.
தகவல் நீர்வைக் கிழார் 10.09.2009
கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலத்தில் 05 கணினிகளை கொண்ட கணினிக் கூடம் அமைப்பதற்கான ப10ர்வாங்க ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. இதற்கு வசதியாகப் பாடசாலைக்கு 3 பேஸ் மின்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பாடசாலையின் அதிபர் திரு கு.வாகீசன் அவர்கள் கணினித்துறை தொடர்பான அறிவில் நிபுணத்துவம் பெற்றவராதலால் இப்பாடசாலையில் அமையும் கணினிக் கூடத்தின் மூலம் பல நன்மைகள் விழையும் என எதிர்பார்க்கலாம்.
தகவல் நீர்வைக் கிழார் 10.09.2009
நீர்வேலி றோமன் கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் பாடசாலையின் பரிசளிப்பு விழா எதிர்வரும் 12.08.2009 சனிக்கிழமை காலை 9 மணிக்குப் பாடசாலை அரங்கில் அதிபர் திரு சி.தர்மரத்தினம் அவர்கள் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு. யோ. ரவீந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் பிரதி அதிபரும் நீர்வையைப் பிறப்பகமாகக் கொண்டவருமாகிய திரு வே.கா. கணபதிப்பிள்ளை அவர்களும் புத்தூர் மெ.மி. பாடசாலையின் இளைப்பாறிய அதிபரும் பாடசாலையின் அயலவருமாகிய திரு மு.தேவராசா அவர்களும் யாழ். பல்கலைக்கழகக் கணிதபுள்ளிவிபரவியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளரும் பாடசாலையின் பழையமாணவியுமாகிய திருமதி நளினி சற்குணநாதன் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
கௌரவ விருந்தினராக நீர்வேலியைச் சேர்ந்தவரும் வலி.கிழக்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்ககங்களின் சமாசத் தலைவரும் சமாதான நீதிவானுமாகிய திரு க.தர்மலிங்கம் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். திரு க.தர்மலிங்கம் அவர்களின் ஆதரவுடன் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்திலிருந்து இப்பாடசாலைக்கு ரூபா 160ää000 ஒதுக்கப்பட்டு போட்டோப் பிரதி இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
தகவல் நீர்வைக் கிழார் 10.09.2009
அரோகரா ஒலி வானைப் பிளக்க வரலாற்றுச் சிறப்பு மிக்க அரசகேசரிப் பிள்ளையாரின் கொடியேற்றம் சிறப்பாக இடம்பெற்றது. சிவஸ்ரீ சா. சோமதேவக் குருக்கள் இறையாசியூடன் கொடியை ஏற்றினார். 20 இற்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் கலந்து சிறப்பித்தனர். கொடியேற்ற நிகழ்வில் ஏறத்தாழ ஆயிரம் வரையான அடியவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
காலை 11. 45 மணியளவில் கொடியேற்றம் இடம்பெற்றது. கொடியேற்றத் திருவிழா தொடர்பாக வசந்த மண்டப எழுந்தருளிப் பிள்ளையார்இ முருகன் ஆகியோருக்கு விசேட சாத்துப்படி அலங்காரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
கொடியேற்ற நிகழ்வூகளைத் தொடர்ந்து பஞ்சமுக விநாயகர் கோவிலில் எழுந்தருளியமையைக் குறிக்குமுகமான நிகழ்வூகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வூகள் சிவஸ்ரீ சோ.சிவஜெயக் குருக்கள் (தேவர் ஐயாவின் மகன்) தலைமையில் இடம்பெற்றன.
ஆலயத்தில் இவ்வருடப் பெருந்திருவிழாவை முன்னிட்டு வழமைபோல தினமும் மதியம் அன்னதான நிகழ்வூ ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. வெளிவீதியூலா இரவில் நிகழ்கின்றமையால் புதிய மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு வெளிவீதி ஒளி வெள்ளமாக இரவில் காட்சி தருகின்றது.
கோவிலின் அருகில் இருக்கும் ஸ்ரீ கணேச சனசமூக நிலைய மண்டபமும் புதிதாகப் புனரமைக்கப்பட்டுள்ளது. இச்சனசமூக நிலையம் 1949 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. அடுத்த மாதம் 60 ஆவது ஆண்டு விழா (மணி விழா) நிகழ்வூகள் இடம்பெறவூள்ளன.
கோவிலின் தீர்த்தத் தடாகமும் புனரமைக்கப்பட்டுள்ளது. நீர்த்தாங்கி பொருத்துதல் குழாய் நீர் விநியோகம் ஆகிய பணிகளும் இடம்பெறுவதாக பரிபாலன சபைப் பொருளாளர் திரு ச.க. முருகையா தெரிவித்தார்.
கொடியேற்றம் தொடர்பான படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
தகவல் நீர்வைக் கிழார்
கவிஞர் கலாநிதி இ.முருகையனின் நினைவு நிகழ்வு கடந்த 26.08.2009 ஞாயிற்றுக்கிழமை நீர்வைமணி கு.தியாகராஜக் குருக்கள் (பிரதம குரு, செல்லக் கதிர்காமகோவில், நீர்வேலி) தலைமையில் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிப் பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
1935 ஏப்பிரல் 23 இல் தென்மராட்சி கல்வயல் கிராமத்தில் பிறந்த முருகையன் 27 ஜூன் 2009 இல் அமரத்துவமடைந்தார். 1967 ஜூன் 09 ஆம் நாள் நீர்வேலியில் தவமணிதேவியைத் திருமணம் செய்ததன் மூலம் நீர்வெலியின் அருந்தவச் சொத்தானார்.
ஈழத்து நவீன கவிதைத்துறையில் முடிசூடா மன்னராக மஹாகவி, நீலாவணன், முருகையன் ஆகிய மூவரையுமே குறிப்பிடுவர்.
நினைவு நிகழ்வில் வரவேற்புரையை திரு த.நடராசா (செயலாளர், வலிகிழக்குப் பிரதேச சபை) வழங்கினார். நினைவுரைகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா, கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ், மூத்த எழுத்தாளர் சிற்பி, ஆங்கில ஆசிரியர் திரு த.ந. பஞ்சாட்சரம், திரு துரை எங்கரசு( கோட்டக் கல்விப் பணிப்பாளர்) ஆகியோர் நல்கினர்.
சிறப்பு நிகழ்வாக கவிதைக்குள் உயிரொன்றி வாழ் என்ற தலைப்பில் கவியரங்கம் இடம்பெற்றது. ஈழத்தின் பிரபல கவிஞர்கள் இதில் பங்கு கொண்டனர். கவிஞர் கல்வயல் வே.குமாரசாமி தலைமை வகித்தார். மூத்த கவிஞர் சோ.பத்மநாதன் (சோ.ப.) கவிஞர் த.ஜெயசீலன், கவிஞர் ம.பா.மகாலிங்கசிவம், கவிஞர் கலாநிதி.தி.வேல்நம்பி ஆகியோர் கவிதைபடைத்தனர்.
நிகழ்வில் யாழ். குடாநாட்டின் பலபகுதிகளிலும் இருந்து எழுத்தாளர்கள் கல்வியாளர்கள் தமிழ் ஆர்வலர்கள் என முந்நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தகவல் ச.லலீசன் (அதிபர்) (நீர்வைக்கிழார்) (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நன்றி - பேராசிரியர் சி. சிவசேகரம்

இலங்கைத் தமிழ் இலக்கியத்திற்குத் தனித்துவமான ஒரு அடையாளம் உண்டு என்பது பற்றித் தெளிவாக எடுத்துரைத்தோர் முற்போக்கு இலக்கிய இயக்கத்தினர். அதை வலியுறுத்திப் பேசியதோடு அதற்கு இந்த மண்ணிற் கூட மறுக்கப்பட்ட அங்கீகாரத்தைப் பெற்றுத் தருவதற்கு முன்னோடிகளாக செயற்பட்டோருட் பேராசிரியர் கைலாசபதிக்கு முக்கியமான இடமிருந்தது.
அந்த அடையாளம் தனித்துவமானது மட்டுமல்ல. அது தரத்திலும் தமிழகத்திற்கு ஈடானதும் சில வகைகளில் உயர்வானதும் என்பதை 1950 களிலிருந்து வளர்ச்சிபெற்ற ஒரு கவிதைப் போக்கு உணர்த்தி நின்றது. அப் போக்கின் முதன்மையான ஒரு பிரதிநிதியாக நாம் முருகையனைக் கூறலாம்.
<< Previous 1 2 Next >> |
|
|
|
|
|
|
|
|
|
|
|